இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா...!!

ChatGPT மற்றும் Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை அரசு சேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
DeepSeek என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி ஆகும்.இது சீனாவின் ஹாங்சோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பெயரில் உள்ள நிறுவனம் பயன்பாட்டை உருவாக்கியது.
DeepSeek ஆனது தரவு பாதுகாப்பின்மை மற்றும் நச்சு மென்பொருள் போன்ற அபாயங்களைக் கொண்டிருக்கும் என அஞ்சப்படுகிறது.
மலிவு விலை DeepSeek செயலியானது அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
அதனால் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான Nvidia சுமார் 593 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த DeepSeek செயலியால் அரசாங்க தரவு மற்றும் ஆவணங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து வரலாம் என்று அதிகாரப்பூர்வ ஆலோசனை கூறுகிறது.
நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை மற்ற அமைச்சகங்கள் பின்பற்றுகிறதா என்பது தெரியவில்லை.
இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே Deepseek செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan