சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா…!!!

சீனா,ஹாங்காங் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த அமெரிக்கா...!!!

சீனா மற்றும் ஹாங்காங்கின் தொகுப்புகளை மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்கா தபால் சேவை கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமீபத்தில் சீன பொருட்கள் மீதான வரிகளை அறிவித்தார்.

அதன்படி, குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கும் நீக்கப்பட்டுள்ளது.

டெலிவரிகளை நிறுத்திவிட்டதாக அமெரிக்க தபால் சேவை கூறிய ஒரு நாளுக்குள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பேக்கேஜ்களின் விநியோகத்தைப் பாதிக்காமல் சீனாவிடமிருந்து வரி திரும்பப் பெற முயற்சிப்பதாக தபால் சேவை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்திய ஆண்டுகளில் ஷீன் மற்றும் டெமு போன்ற சீன வணிகர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

அத்தகைய குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு கடந்த ஆண்டு மட்டும் 1.36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரி விலக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா அறிவித்துள்ள வரிக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்தது.

வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அமெரிக்கா ஆயுதங்களாக பயன்படுத்துவதாக சீனா கருதுகிறது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan