பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து…!!!

பும்ரா இல்லைனா கோப்பையை வெல்வது கடினம்..!!! முன்னாள் பயிற்சியாளர் கருத்து...!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையே சமீபத்தில் நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. வருண் சக்ரவர்த்தி இந்தத் தொடர் முழுவதும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

வரும் 11ம் தேதிக்குள் வீரர்களை மாற்ற ஐசிசி அனுமதி அளித்துள்ளது. பும்ரா அணியில் இருப்பாரா அல்லது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் பங்கேற்க மாட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது.இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் பும்ரா இல்லை என்றால் இந்தியா சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு 30 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பும்ராவை பொறுத்த வரையில் எல்லாமே ரிஸ்க் தான்.. இந்திய அணி எதிர்காலத்தில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர்களில் பும்ராவும் ஒருவர். ஏதாவது முக்கியமான விளையாட்டில் அவரைப் பயன்படுத்தி, அவரிடமிருந்து ஒரு வேலையைப் பெற வேண்டும்.”

ஏனெனில் பும்ரா மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உள்ளது. பும்ரா திறமையாக பந்து வீசுபவர் அவர் களத்தில் இறங்கி அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பும்ரா காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பும்ரா மட்டும் முழு உடல் தகுதி இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை என்றால், இந்தியாவின் வெற்றி வாய்ப்பு முப்பது சதவீதம் குறையும்.பும்ரா மட்டும் உடல்தகுதியுடன் இருந்தால் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுவார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாக மாறும். டெத் ஓவரில் பும்ரா பந்துவீசும்போது, ​​அது முழு முடிவையும் மாற்றிவிடும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan