சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!

சாங்கி விமான நிலையத்தில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவைச் சேர்ந்தவர் கைது!!

சிங்கப்பூரில் ஜனவரி 23ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தில் உள்ள கடையில் கழுத்துப்பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

கடையில் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனுடைய மதிப்பு 480 வெள்ளி ஆகும்.

இதனை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபர் திருடியது CCTV கேமராவில் பதிவாகியிருந்தது. அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.இருப்பினும் அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டார்.

அதன் பிறகு ஜனவரி 28ஆம் தேதி சிங்கப்பூருக்கு திரும்பியபோது சாங்கி விமான நிலையத்தில் அந்த நபரைக் காவல்துறை கைது செய்தது.

அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்தது.

பிப்ரவரி 4-ஆம் தேதி(இன்று) நீதிமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.