அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!!

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி...!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளார்.

டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர்.

மோடியின் இரண்டு நாள் பயணத்தின் போது வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்த மோடி அங்கு செல்கிறார்.

கடந்த வாரம் இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடினர்.

நம்பிக்கை சார்ந்த உறவை உருவாக்க இருவரும் உறுதி பூண்டுள்ளனர்.

நியாயமான இருதரப்பு வர்த்தக உறவை அடைவதன் முக்கியத்துவத்தை திரு.டிரம்ப் வலியுறுத்தினார்.

QUAD கூட்டணியை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் தலைவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

QUAD அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் உள்ளது.