ஆஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!
ஆஸ்திரேலியாவில் பிரபல அலைச்சறுக்கு விளையாடும் இடத்தில் 17 வயது பெண் ஒருவரை சுறா தாக்கியதால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குயின்ஸ்லாந்தில் ஊரிம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது மீன் திடீரென தாக்கியது.
உடலின் மேற்பகுதியை மீன் கடித்ததில் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீசார் அவரை காப்பாற்ற முயன்றும் அந்த பெண் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஐந்து வாரங்களில் நடந்த மூன்றாவது பயங்கர தாக்குதல் இதுவாகும்.
இப்பகுதியில் சுறா மீன்கள் அடிக்கடி காணப்படுவதாகவும், ஆனால் இதை யாரும் பொருட்படுத்தவில்லை என அப்பகுதியில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
1791 முதல் ஆஸ்திரேலியாவில் 1,200 க்கும் மேற்பட்ட சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் சுமார் 250 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan