தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொண்ட முதல் அதிகாரத்துவ பயணம்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியை 60 தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்தது.
சட்ட,உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.சமய நல்லிணக்கம்,பல இன ஒற்றுமை, மொழி பாதுகாப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் எடுத்துக்காட்டாக திகழ்வதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு சின்னம் அமைக்கப்படும்.அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மன்னார்குடியில் நினைவு சின்னமும்,திரு.லீ குவான் யூ பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்றார்.
சன்டெக் சிட்டி மாநாட்டு நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் சுமார் ஈராயிரம் பேர் கலந்து கொண்டனர்.