Latest Tamil News Online

சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள நீண்ட கால உறவு மறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது-தமிழக முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் சிங்கப்பூருக்கு நேற்று முன்தினம்(மே-23) அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார்.

சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிதி, தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேசினார்.

சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீட்டை பெருக்கி கொள்வதற்கான இணக்க குறிப்புகள் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சிறிய நடுத்தர நிறுவனங்களை மின்னியல்மயமாக்குவதற்கு வழி அமைக்கும். அதோடு, நீடித்து நிலைக்கக் கூடிய தொழிற்சாலை நிறுவனங்களை நிறுவுவதற்கும் வழியமைக்கும்.

புதிய உற்பத்தி நிலையம் ஒன்றை செங்கல்பட்டு இடத்தில் அமைக்கவும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.

ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்கும், திறன் பயிற்சிக்கும் நிலையம் உதவும்.

அங்கு சிங்கப்பூரின் தொழில்நுட்ப கல்விக்கழகம் பயிற்சிகளை வழங்கும்.

“ தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகள்´´ குறித்த சிறப்புக் கூட்டத்துக்கு சிங்கப்பூர் இந்திய வர்த்தக,தொழிற்சபை ஏற்பாடு செய்திருந்தது.

அதில் அரசாங்க அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சபையின் உறுப்பினர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்,சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொருளியலை வலுப்படுத்தும் உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற விருக்கிறது.

அதில் கலந்து கொள்ளும்படி சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடப்பட்டது.