Singapore news

சிங்கப்பூரில் வட்ட பாதை ரயில் தடத்தின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள்!பயண நேரத்தில் மாற்றம் ஏற்படுமா?

சிங்கப்பூரில் வட்ட பாதை ரயில் தடத்தின் 7 நிலையங்களில் கூடுதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

வரும் ஜூன்,ஜூலை மாதங்களில் பயணம் மேற்கொள்ளப்படும்.

ஒரு தடம் மூடப்பட்டால் ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படும்.அதனால் பயண நேரம் அரை மணி நேரம் வரை கூடுதலாக வாய்ப்பு உள்ளது என்று ஆணையம் நேற்று (மே-24) தெரிவித்தது.

Dhoby Ghaut,Bras Basah,Esplanade,Promenade,Nicoll Highway,Marina Bay,Bayfront ஆகிய நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பராமரிப்பு பணிகள் 6 வாரங்களில் நிறைவடையும் என்றது.

பயணிகள் முன்கூட்டியே திட்டமிடும்படி ஆணையம் கேட்டுக் கொண்டது.

பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய வேறு ரயில் பாதைகளையோ, பேருந்து சேவைகளையோ பயன்படுத்தும்படி ஆணையம் கேட்டுக்கொண்டது.

மேல் விவரங்களுக்கு பயணிகள் My Transport.SG செயலியை அல்லது நிலப் போக்குவரத்து நிறுவனம்,SMRT நிறுவனம் ஆகியவற்றின் சமூக ஊடக தளங்களை அணுகலாம் என்று கூறியது.

பராமரிப்பு மேற்கொள்ளப்படும் நிலையங்களில் ஊழியர்கள் பயணிகளுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.