சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!!
நடிகை நயன்தாரா பிப்ரவரி 3ஆம் தேதி அதாவது சிம்புவின் அன்று பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. 40 வயதை நெருங்கினாலும் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பான் இந்தியா என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா கைவசம் தற்போது பல்வேறு படங்களை வைத்துள்ளார்.
கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்த அவர், அடுத்து மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார்.
இதுதவிர யாஷின் நடிக்கும் பான் இந்தியா படமான டாக்ஸிக் படத்திலும் நயன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் யாஷினின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார்.
இது தவிர நடிகை நயன்தாரா கைவசம் இருக்கும் இன்னொரு படம் தான் சசிகாந்த் இயக்கத்தில் உருவான டெஸ்ட் திரைப்படம்.இப்படத்தில் நயன்தாராவுடன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது Netflix இல் அடுத்தது என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், மீண்டும் நெட்பிளிக்ஸில் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் நயன்தாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
மேலும் பிப்ரவரி 3ஆம் தேதி நடிகை நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவின் பிறந்த நாளாக இருப்பதால் இது என்ன அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.நயன்தாரா நாளை வெளியிடப் போகும் அறிவிப்பு, அவர் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் நேரடியாக Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும்.அதைத்தான் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நாசுக்காக குறிப்பிட்டுள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan