இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்…!!!

இங்கிலாந்தின் விமர்சனத்திற்கு தரமான பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள்...!!!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடி வருகிறது.

தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து மூன்றாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது.இருப்பினும், நான்காவது போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முன்னதாக காயத்தில் இருந்து மீண்டிருந்த இந்திய வீரர் ஷிவம் துபே கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து தலையில் பட்டு காயமடைந்தார்.அவரை பரிசோதித்த இந்திய அணையின் மருத்துவர் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியதால் தொடர்ந்து விளையாடிய ஷிவம் துபே கடைசி பந்தில் அவுட் ஆனார்.அடுத்து இங்கிலாந்து பேட் செய்தபோது மாற்று விதியை பயன்படுத்திய இந்தியா அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் கருத்து:

அந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திய ராணா தனது அதிரடியான பந்துவீச்சினால் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியிலேயே இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றினார்.

ஆனால் ஐசிசி விதிகளின்படி, ஒரு பேட்ஸ்மேன் ஓய்வு பெற்றால், மற்றொரு பேட்ஸ்மேன் விளையாட வேண்டும், ஒரு பந்து வீச்சாளர் ஓய்வு பெற்றால், மற்றொரு பந்து வீச்சாளர் விளையாட வேண்டும்.அதன்படி, ஆல்-ரவுண்டர் துபேக்கு பதிலாக பந்துவீச்சாளர் ராணாவை இந்தியா தேர்வு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் விமர்சித்தார்.

மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் அலெஸ்டர் குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்றோர் இந்த முடிவை விமர்சித்தனர். இதற்கு இந்திய ரசிகர்கள் தரமான பதிலடியை கொடுத்துள்ளனர்.

ரசிகர்களின் பதிலடி:

இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2019 உலகக் கோப்பை நினைவில்லையா? ஏனெனில் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கப்டில் விஷய பந்து தவறுதலாக பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி சென்றது.

அதற்கு முன் அவர் 2 ரன்கள் எடுத்தார். அப்போது உண்மையான விதிப்படி 4 ரன்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் விதிகளை அறியாத இலங்கை நடுவர் குமார் தர்மசேனா 6 ரன்கள் வழங்கினார்.

இறுதியில், போட்டி சமநிலையில் முடிவடைந்தபோது, ​அதிக பவுண்டரிகள் அடித்தார்கள் என்ற முட்டாள்தனமான விதிமுறையை வைத்து நியூசிலாந்து தோல்வியடையாத போதும் கோப்பை இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது.

அங்கு விதிகளும் நீதியும் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இங்கு போட்டி நடுவரின் அனுமதியுடன்தான் துபேவுக்கு பதிலாக ராணாவை இந்தியா பயன்படுத்தியது.எனவே 2 விஷயங்களில் நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலகக் கோப்பையை வென்றதை விட இந்தியா செய்தது மோசமானதல்ல என்று இங்கிலாந்துக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர்.