கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதனை மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.
உணவு, மின்சாரம்,எரிபொருள், சில்லறை வர்த்தகம் உள்ளிட்டவையின் பணவீக்கம் குறைந்திருக்கிறது.
அந்த நிலை ஏற்பட்டதற்கு பயணம் தொடர்பான சேவைகளில் பணவீக்கம் கூடியது காரணமாக சொல்லப்படுகிறது.
அந்த விவரங்களை சிங்கப்பூர் நாணய வாரியம் வெளியிட்டது.
கடந்த மாதம் அனைத்து பொருட்களுக்கு பயனீட்டாளர் விலைக்குறியீடு ஆண்டு அடிப்படையில் 5.7 விழுக்காடு கூடியது.
மார்ச் மாதத்தில் 5.5 விழுக்காடாக இருந்தது.
தனியார் போக்குவரத்து துறை, சேவை துறையின் பண வீக்கமும் ஏப்ரலில் உயர்ந்தது.
மாத அடிப்படையில் அடிப்படை பயனீட்டாளர் விலைக்குறியீடு 0.4 விழுக்காடு அதிகரித்தது.
அதற்கு காரணம் விமான கட்டணங்களும்,விடுமுறை செலவினமும் என்று சொல்லப்படுகிறது.