மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்…..

மலேசியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் குறைந்தபட்ச ஊதியம்.....

மலேசியாவில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரிங்கிட் அமலுக்கு வரும்.

இந்த புதிய நடைமுறையால் 4.37 மில்லியன் ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று 8 World செய்தி தெரிவிக்கிறது.

குறைந்தது 5 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். இதற்குமுன் குறைந்தபட்ச சம்பளம் 1500 ரிங்கிட்டாக இருந்தது .இன்று முதல் அது 1700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பள நடைமுறைகளில் மாற்றங்களைச் செயல்படுத்த முதலாளிகளுக்கு 6 மாத அவகாசம் வழங்கப்படும்.

விதிகளை மீறும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan