கடைசியாக மார்ச் மாதத்தில் சிங்கப்பூரில் மின்னியல் சாலைக் கட்டணம் மறுஆய்வு செய்யப்பட்டது.
தற்போது,ஜூன் மாத பள்ளி விடுமுறைக்காக பல இடங்களில் மின்னியல் சாலைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வரை ஒரு வெள்ளி குறைவாக இருக்கும்.
அதனை நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.
ஜூன் 26-ஆம் தேதி முதல் பழையப்படி கட்டணம் விதிக்கப்படும்.
கட்டணம் குறிப்பிட்ட நேரங்களில் குறைவாக இருக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.