முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா?

முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா?

வறண்ட சருமம்,முகப்பரு பாதிப்பு மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கம் போன்ற பல சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

பெரும்பாலான சருமங்களுக்கு இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பொருத்தமாக இருக்கும் என்று இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்றும் கூறுகின்றனர்.

அதோடு சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.அதோடு ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகளை சாக்லேட் மாஸ்க் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் எப்படி உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் என்றால் என்ன?


இந்த ஃபேஸ் மாஸ்க் சாக்லேட் பவுடர் அல்லது டார்க் சாக்லேட் உருக்கி முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் நாம் வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய தேன்,தயிர்,ஓட் மீ்ல்
போன்றவைகளை பயன்படுத்துவதன் மூலம் அதன் நன்மைகள் கிடைக்கும்.

கோக்கோ பவுடரில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் ஃப்ளாவனாய்டுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்றவை நமது சருமத்திற்கு தேவையான நன்மைகளை வழங்க கூடியது என்றும் கூறப்படுகிறது. அதோடு புற ஊதா கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உதவுகின்றது.

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் உதவுவதாகவும் கூறப்படுகிறது.

நாம் சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் செய்ய பயன்படுத்தும் கொக்கோ பவுடரில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் அவை சருமத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

மேலும் நம் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சி ஏற்படாமலும் தடுக்கக் கூடியது.
சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்போது மிருதுவாகவும் பளபளப்பாகவும் தோன்றும்

நம் சருமத்தில் சூரிய ஒளியினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது கொக்கோ பவுடரில் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது.

வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்தும் போது அவை ஆரோக்கியமான பொருட்களாக இருந்தாலும் உங்களின் சருமத்தில் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றனவா என்பதை பரிசோதிக்க வேண்டும். முன்கூட்டியே பேட்ச் டெஸ்ட் செய்து பொருட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan