2024 YR4 சிறுகோளால் பூமிக்கு வரும் ஆபத்து...!! விஞ்ஞானிகள் கூறுவது என்ன...???
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் 2032 இல் பூமியை சிறுகோள் ஒன்று தாக்க உள்ளதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிறுகோள் ஆராய்ச்சியாளர்கள், விண்வெளியில் சிறுகோள்களை ஆய்வு செய்தபோது, டிசம்பர் 27, 2024 அன்று பூமியில் இருந்து சுமார் 8,29,000 கிமீ தொலைவில் பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த சிறுகோள் 2024 YR4 என்று பெயரிட்டு அதன் மீது கவனம் செலுத்தினர். சுமார் 196 அடி விட்டம் கொண்ட 2024 YR4 சிறுகோளின் பாதையைப் பார்க்கும்போது, 2032ல் இந்த சிறுகோள் பூமியைத் தாக்க 1.2% வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போது சூரிய குடும்பத்தை சுற்றி வரும் இந்த சிறுகோள் 2028ல் மீண்டும் பூமியை நெருக்கமாக கடந்துச் சென்று 2032ல் பூமியை தாக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
2024 YR4 சிறுகோள் பூமியை தாக்கும் போது பெரிய சேதத்தை ஏற்படுத்தாது என்றாலும் கூட அது மோதும் போது சுமார் 8 மெகாடன் ஆற்றலை வெளியிடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதாவது,8 மெகா டன் ஆற்றல் என்பது 1945ல் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு ஆற்றலை விட 500 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சுகள் மிகக் கொடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது அதைவிட பலமிக்க இந்த சிறுகோள் பூமியின் மீது தாக்கினால் அதிக அளவு கதிர்வீச்சு வெளிப்படும் என்று கூறப்படுகிறது.
அதனால் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் உள்ள சிறுகோளுடன் மோதி அதன் பாதையை நகர்த்துவது குறித்து யோசித்து வருகின்றனர்.
எனவே வானியலாளர்கள் 2024 YR4 இன் சாத்தியமான அபாயங்கள் மற்றும் விளைவுகள் குறித்து தெரிந்துகொள்ள அதன் சுற்றுப்பாதை மற்றும் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan