இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்…!! குவியும் வாழ்த்து…!!

இரட்டை சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் சினேகன்-கன்னிகா தம்பதியினர்...!! குவியும் வாழ்த்து...!!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். பாடலாசிரியர் மட்டுமின்றி நடிகர், பின்னணி பாடகர் என பன்முக கலைஞராக சினிமாவில் கால் பதித்தவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தான் ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலிப்பதாக கூறினார்.

ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை. அந்தப் பெண் யார் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

இந்நிலையில்தான் அவருக்கும் கனிகாவுக்கும் ஜூலை 29, 2021 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போதிருந்து, அவர்கள் திரையுலகின் அற்புதமான ஜோடிகளில் ஒன்றாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் அடிக்கடி பல்வேறு ரீல்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கனிகா பட வாய்ப்புகள் தேடி சென்னைக்கு வந்தார். அவருக்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவில் சில படங்களில் நடித்த கன்னிகா, கல்யாண பரிசு என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட கால காதலியான கன்னிகாவை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். சமீபத்தில் கூட பிரம்மாண்டமாக வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.

இந்நிலையில்தான் சினேகன் – கனிகா தம்பதியினர் தங்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு கடந்த 25ம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.இதுகுறித்து சினேகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:” இறைவா ,நீ ஆணையிடு தாயே என் மகளாக மாற” என்ற என் அன்பின் வேண்டுகோள் இரட்டிப்பாக நிறைவேறியது. தாயே மகளாகவும்,மகளே தாயாகவும் 25.01.2025 அன்று இரண்டு தேவதைகள் பிறந்திருக்கிறார்கள்.. உள்ளமும் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள் இன்று பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்த நிதிசன்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.