கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!!

கடந்த ஆண்டு மின்-ஸ்கூட்டர்களின் குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைவு!!

நிலப் போக்குவரத்து ஆணையம் மின்-ஸ்கூட்டர்களின் விற்பனைகளில் தொடர்பான குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

சென்ற வருடம் மின்-ஸ்கூட்டர்களின் மீது 17 குற்றங்கள் பதிவாகியுள்ளது.

இதே போல அதற்கு முந்தைய ஆண்டில் 39 குற்றங்கள் பதிவாகின.

கடைகளில் பதிவு செய்யப்படாத மின்-ஸ்கூட்டர்களை வைத்திருப்பது, அதற்கான எண் பலகைகள் சரியாக பொருத்தாமல் இருப்பது போன்றவை குற்றங்களில் அடங்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையத்தில் மின்-ஸ்கூட்டர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

விதிகளை மீறும் சில்லறை வர்த்தகர்கள் மற்றும் பயனாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட இடங்களிலிருந்து மின்-ஸ்கூட்டர்களை வாங்குமாறு அறிவுறுத்தியது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan