என்ன ..!!முகமது சிராஜ் டேட்டிங்கில் இருப்பது இந்த பிக்பாஸ் பிரபலத்துடனா...???

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் பிக்பாஸ் பிரபலத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இளம் வீரர் முகமது சிராஜின் பெயர் தொடர்ந்து காதல் விஷயத்தில் அடிபடுகிறது.
சிராஜ் இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளர். கடந்த 2023ம் ஆண்டு ஐசிசி பவுலர் தரவரிசையில் சிராஜ் முதலிடம் பிடித்தார்.இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக சிராஜின் பந்துவீச்சில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால், பார்டர் கவாஸ்கர் தொடரில் சிராஜ் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணையிலும் சிராஜ் சேர்க்கப்படவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் சிராஜ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான மகிராவுடன் சிராஜ் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13 வது சீசனில் கலந்து கொண்ட மகிரா காஷ்மீரை சேர்ந்தவர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இவருக்கும் பராஸ் சப்ராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த காதல் நீண்ட நாள் நிலைக்கவில்லை.இந்நிலையில் தான் முகமது சிராஜ் மற்றும் மகிரா சர்மா இருவரும் காதலித்து டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், இந்த காதல் இன்ஸ்டாகிராம் மூலம் தான் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால், இந்த தகவலை மகிராவின் தாய் சானியா சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சிராஜுக்கும் மகிரா சர்மாவுக்கும் எந்த ஒரு காதலும் இல்லை. என் மகள் பிரபலமானவர் என்பதால் யாருடனாவது தொடர்பு படுத்தி பேச தான் செய்வார்கள். இதையெல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம் என்றும் இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan