சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கு கோவிட்-19 நோய் தொற்று முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை தமது Facebook பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்தார்.
அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கும் கென்யாவுக்கும் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டார். பயணம் மேற்கொண்ட பிறகு, நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். நோய் தொற்று சரியாகும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தந்துள்ளதாகவும் கூறினார்.
Paxlovid மருந்தை மருத்துவர்கள் கொடுத்ததாகவும் கூறினார்.
கடந்த நவம்பர் மாதத்தில் கோவிட்-19 கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
அவருக்கு வயது 71.
அனைவரும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.