Latest Singapore News

சிங்கப்பூர் விரைவுச்சாலையில் விபத்து!பெண் மரணம்!

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (மே-20) சிலேட்டர் காலை சுமார் பத்தரை மணியளவில் விரைவு சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக செய்தியிடம் கூறியது.

இந்த விபத்து புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் பாதையில் லெண்டோர் அவென்யூ வெளியேறும் பாதைக்கு விபத்து நடந்தது.

விபத்தில் காயம் அடைந்த இருவரையும் Khoo Teck Puat மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இருவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.