தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை குழுவினர் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பங்குதாரர்களாக செயல்படுமாறு அழைப்பு விடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக முதல்வர் தலைமையிலான குழுவினர் பயணம் மேற்கொள்ள விருக்கின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10,11-ஆம் தேதிகளில் `ஜிம்´ எனும் மூன்றாவது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது.
இம்மாதம் 23,24-ஆம் தேதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதைப் பற்றிய செய்தி குறித்து சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை அறிக்கை வெளியிட்டது.