கட்டுமான தளத்தில் இடிந்து விழுந்த தரை!! சம்பவ இடத்திலேயே வெளிநாட்டு ஊழியர் மரணம்!!
சிங்கப்பூர் : 24 Raffles Place இல் உள்ள கட்டுமான தளத்தில் தரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்த ஊழியர் அங்கு பொருட்களைச் சுமக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது தரை இடிந்து விழுந்து அவர் மணலில் விழுந்ததாக மனிதவள அமைச்சகம் சொன்னது.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவ உதவியாளர் பரிசோதித்து அறிவித்தார்.
இச்சம்பவம் ஜனவரி 25 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நேர்ந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியது.
ஊழியரின் இறப்பு சந்தேகத்திற்கிடமான வகையில் இல்லை என்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை கூறியது.
Clifford Centre முன்பு அமைந்திருந்த இடத்தில் புதிய கட்டுமானத் தளம் அமைந்துள்ளது.அங்கு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கட்டுமான தளத்தில் நடந்த விபத்து குறித்து பிற்பகல் 3 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
ஜனவரி 2-ஆம் தேதி ஓர் கட்டுமான தளத்தில் விபத்து நடந்தது. நடந்த சம்பவத்தில் 29 வயதுடைய வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.இச்சம்பவம் இந்த வருடத்தின் முதல் வேலையிட மரணம் இதுவாகும். டெங்காவில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் கான்கிரீட் பம்ப் டிரக்கின் குழாய் அவர் மீது குத்தியதால் உயிரிழந்தார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0