வெற்றியா?தோல்வியா? கடைசி நிமிடம் வரை திக்.. திக்..சாதித்து காட்டிய திலக் வர்மா...!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, தொடரின் தொடக்கத்தில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
இதனால் இந்திய அணி 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.
முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், அபிஷேக் சர்மா 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பார்மில் இல்லாத கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் களம் இறங்கிய துருவ் ஜூரல் 4, ஹர்திக் பாண்டியா 7 ரன்னுடன் 10 வீரர்களுக்கு முதல் 5 முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.
இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்தாலும் களம் இறங்கியது முதல் ஆட்டமிழக்காமல் விளையாடிய திலக் வர்மா பல சிக்ஸர்களை பறக்கவிட்டு 72 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மேலும், இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்று சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இது குறித்த தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த வகையில் நேற்று 72 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆட்டம் இழக்காமல் தொடர்ந்து 300 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார்.
திலக் வர்மா தனது கடைசி 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் முறையே 107*, 120*, 19* மற்றும் 72* ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் மார்க் சாப்மேன் 271 ரன்களும், ஆரோன் பின்ச் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தலா 240 ரன்களும் எடுத்துள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan