கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது.
காய்கறி,கடல் உணவு, கோழி முட்டைகள் ஆகியவற்றின் உற்பத்தி சரிந்துள்ளது.
தேசிய ஊட்டச்சத்து தேவையில் 30 விழுக்காட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் இங்கேயே உற்பத்தி செய்ய திட்டமிடுகிறது சிங்கப்பூர்.
பண்ணைகளில் கோழி முட்டைகளின் உற்பத்தி சுமார் 5 விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தி குறைய நோய் பரவல் ஏற்பட்டதை காரணமாக கூறப்பட்டது.எனினும், அடுத்தடுத்த காலாண்டுகளில் முட்டை உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பியது.
உள்நாட்டில் காய்கறி விளைச்சல் ஆக அதிகமாக 15 விழுக்காடு சரிந்துள்ளது. கடலுணவு உற்பத்தி 13 விழுக்காடு குறைந்தது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சந்தையில் பெரிய வரவேற்பு இல்லை என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
எனினும், பண்ணைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, பண்ணைகளில் உற்பத்தியை பெருக்கும் வழிகளையும் உணவு அமைப்பு ஆராய்ந்து வருகிறது.