சிங்கப்பூரில் Carousell தளத்தில் சட்டத்துக்கு புறம்பாக Deliveroo,Foodpanda விநியோக ஓட்டுநர்களின் கணக்குகள் விற்பனைக்கு இருப்பதாக காட்டும் விளம்பரங்களை CNA செய்தி கண்டுபிடித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக விநியோக நிறுவனங்களில் வேலை செய்ய அது வழிவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.
கணக்குகளை ஒருமுறையோ வாராந்திர, மாதந்திர அடிப்படையிலோ கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுக்கலாம் என்று விளம்பரங்களில் கூறப்பட்டிருந்தது.
“குறைந்த வருமான ஈட்ட விரும்புவோருக்கு foodpanda கணக்கு வாடகைக்கு விடப்படும். அதற்கான வருமானத்தை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பெறலாம்´´ என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து வாடகை கழிக்கப்படும். மீதம் உள்ள தொகை உரியவரிடம் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாடகைக்கு விடப்பட்டுள்ள Deliveroo அல்லது foodpanda வின் 10 கணக்குகளை CNA கண்டுபிடித்துள்ளது.
GrabFood கணக்குகள் அவற்றில் இல்லை.
கணக்குகளை வாடகைக்கு எடுக்க ஆர்வம் காட்டுவோர் வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என்ற தகவல் Carousell தளத்தில் இல்லை.
சிங்கப்பூரில் உணவு விநியோக ஓட்டுநர்களாக வேலை செய்வதற்கு சிங்கப்பூரர்களுக்கு, நிரந்தரவாசிகளுக்கு மட்டுமே சட்டத்தில் அனுமதி உண்டு.
இது குறித்து நிறுவனங்கள் கூறியதாவது :
foodpanda – வாடகைக்கு விடப்படும் கணக்குகளைத் தவறாக பயன்படுத்துபவர்களை அடையாளம் காணும் வழிகள் நடப்பில் இருப்பதாக கூறியது.
Deliveroo – மாற்று ஓட்டுநர்கள் இருக்கலாம். ஆனால், அதற்கு நிபந்தனைகள் உள்ளன.
Carousell – விற்பனை தளத்தில் சட்ட விரோதமான செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் வேலை நியமன சட்டத்தின்கீழ் சட்ட விரோதமாக உணவு விநியோக ஓட்டுநராக வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அல்லது அதனைச் செய்ய தூண்டுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.20,000 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.