தைவான் நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூரரின் எலும்புகள் மீட்பு...!!!

தைவானின் ஹுவாலியென் பகுதியில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் பலியாகி உள்ளனர்.
திரு.சிம் மற்றும் அவரது மனைவி கடைசியாக ஷாகடாங் சாலையில் காலை 7.20 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்குவதைக் கண்டனர்.
அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தாய்வான் அரசு அவர்கள் இருவரும் இறந்ததாக அறிவித்து இறப்பு சான்றிதழ்களை வழங்கியது.
நிலநடுக்கத்தில் காணாமல் போன சிங்கப்பூர்
பிரஜையின் எலும்புகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றை வாங் என்ற உள்ளூர் நபர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
ஷாகடாங் பாதையிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆற்றங்கரையில் மனித எலும்புக்கூடுகள் இருப்பதை அவர் பார்த்துள்ளார்.
தடயவியல் நிபுணர்கள் எலும்புக்கூடுகளை கைப்பற்றி சோதனை செய்தனர்.
காணாமல் போனவரின் மகன் அளித்த DNA மரபணு மாதிரிகள் வைத்து பரிசோதிக்கப்பட்டன.
சோதனையில் அந்த எலும்புகள் காணாமல் போன 47 வயது சிங்கப்பூர் சிம் ஹுவீ கொக்கின் எலும்புகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
அருகில் வேறு எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
மீட்கப்பட்ட எலும்புகள் திரு.சிம்மின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan