சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : பொங்கோல் பகுதியில் உள்ள கழக வீட்டில் ஜனவரி 26 ஆம் தேதி (இன்று) தீ விபத்து ஏற்பட்டது.பிளாக் 224A,சுமாங் லேனில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை சுமார் 5 மணியளவில் தகவல் வந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது .

7 வது மாடியில் இருக்கும் வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்தது.

சம்பவ இடத்திற்கு பொங்கோல் ,செங்காங்,தெம்பனீஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வருவதற்கு முன்னதாகவே வீட்டில் இருந்த நால்வர் தானாகவே வெளியேறினர்.

அக்கம் பக்கத்தில் இருந்து தங்களது வீடுகளில் இருந்து சுமார் 60 பேர் வெளியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு புகையை சுவாசித்த ஒருவர் அழைத்து செல்லப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் , மின்சார சாதனத்தால் தீ மூண்டது தெரிய வந்துள்ளது.