ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!!

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!!

சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மிட்டாய் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

பெற்றோர் Heimlich Maneuver முறையை பயன்படுத்தி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது.

40 நிமிடங்களுக்கு முயற்சி செய்தும் எந்த பயனும் அளிக்காததால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக 8 world செய்தி தளம் தெரிவித்தது.

மூச்சுத் திணறல் ஏற்படும்போது தொண்டையில் இருக்கும் உணவு மற்றும் அடைப்புகளை நீக்குவதற்காக பயன்படுத்தும் முறை தான் Heimlich meneuver முறை ஆகும்.