Singapore news

“நகைச்சுவை மன்னன்´´ பற்றிய ஓர் சுவாரசிய தகவல்!

கவுண்டமணியின் நகைசுவை வார்த்தைகளின் கலக்கல் உலகமே பேசுதய்யா…..

கவுண்டமணி எந்த அளவுக்கு காமெடியில் மிக சிறந்த வல்லவர்’என்ற நிறைய வித்தியாசமான வார்த்தைகளையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

தமிழ் சினிமா உலகில் கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் 200 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.கவுண்டமணியின் நகைச்சுவை உணர்வை பார்த்து என கோலிவுட் எப்படி இப்படினு நினைத்து கொண்டிருந்த நேரத்தில், எப்படி வேண்டுமானாலும் நகைச்சுவை பண்ணாலாம், ரசிகர்கள் சிரித்தால் போதும் என்ற எண்ணத்தை கொண்டு வந்தவர் கவுண்டமணி.

பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படம் எப்படி தமிழ் சினிமாவிற்கு ரஜினி மற்றும் கமல் என்ற இரு பெரும் துருவங்களை கொடுத்ததோ, அதே படத்தின் மூலம் தான் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியையும் கொடுத்தது. தொடக்கத்தில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் பிறகு நகைச்சுவை நடிகரானார்.

கவுண்டமணி ஜெயராம் காமெடியில் வெளிவந்த 5 படங்கள்.. சிறுசும் பெருசும் குஷ்பூ உடன் செஞ்ச ரகளை என்றும் மக்கள் மறப்பதில்லை.

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே இன்றுவரை பிரபலமானவை தான். இவர்களுடைய காமெடிக்கு என பல படங்கள் வெற்றி பெற்றன. கரகாட்டக்காரன், சேரன்-பாண்டியன், சின்ன கவுண்டர் போன்ற படங்களின் காமெடிகள் எல்லாம் அக்மார்க் காட்சிகளாக இன்று வரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது.

கவுண்டமணி எந்த அளவுக்கு காமெடியில் கலக்குகிறாரோ, அதே அளவுக்கு நிறைய வித்தியாசமான வார்த்தைகளையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். டகால்டி, கோமுட்டி தலையா, போன்ற வார்த்தைகள், அதன் கூட அவர் அடிக்கும் கவுண்டர்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்காத இடங்களில் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.