Singapore News in Tamil

திடீரென்று காலமான பருத்திவீரன் பட துணை நடிகர்!

திடீரென்று காலமான பருத்திவீரன் பட துணை நடிகர்.. மிக சிறந்த மறக்க முடியாத, நகைசுவை கதாபாத்திரம் பொணந்திண்ணி.

பருத்திவீரன் பட நகைசுவை பிரபலம் திடீரென்று இன்று மரணம்.

அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்தவர், சினிமாவில் இதுவரை 140 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர் .

இவர் சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 70 வயதில் திடீரென்று மரணம் அடைந்தார் .

பருத்திவீரன் படத்தில் பொணந்திண்ணி ஆக நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் செவ்வாழை ராசு.அவரோட படத்தில் “கொட்டு வாங்கி மண்டை வீங்கி வீட்ல யாராவது பெரியவங்கல கூட்டிட்டு வா ´´காமெடியெல்லாம் மக்களால் மறக்க முடியாது.

இவர் திடீரென்று இன்று உயிரிழந்திருப்பது திரை பிரபலங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இன்று காமெடியில் கலக்கிய படங்களை பற்றி தான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.