இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?

இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட இறைச்சி வகைகள் இவைதானா?

பாக் குவா எனப்படும் பன்றி இறைச்சியைப் பொதுமக்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டும் சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி உள்ளது.

தற்போது மலேசியாவில் இருந்து பன்றி மற்றும் மாட்டு இறைச்சிகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வர அனுமதி இல்லை.

சிங்கப்பூருக்குள் எந்தெந்த நாடுகளில் இருந்து என்னென்ன இறைச்சி வகைகளைக் கொண்டு வரலாம்?

1️⃣ஆட்டு இறைச்சி


2️⃣மாட்டிறைச்சி


3️⃣கோழி


4️⃣பன்றி இறைச்சி

1️⃣ மாட்டு இறைச்சி :


அர்ஜென்டினா ,ஆஸ்திரேலிய, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து,பிரான்ஸ், ஹங்கேரி, நியூசிலாந்து, ஜப்பான்,நெதர்லாந்து, ஸ்வீடன்,உருகுவே, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து மாட்டிறைச்சிகளை எடுத்துவர அனுமதி உண்டு.

2️⃣ ஆட்டு இறைச்சி :

பெல்ஜியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலிய, கனடா, டென்மார்க்,பிரான்ஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்ஸர்லாந்து, உருகுவே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து ஆட்டு இறைச்சிகளை சிங்கப்பூருக்குள் எடுத்து வரலாம்.

3️⃣ கோழி :

கோழி இறைச்சிகளை அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம்,பிரேசில், கனடா,சிலி,டென்மார்க், பிரான்ஸ்,ஜெர்மனி, ஹங்கேரி, அயர்லாந்து, நியூசிலாந்து, சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்தும் கொண்டுவர அனுமதி உள்ளது.

4️⃣ பன்றி இறைச்சி :

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, சிலி, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பன்றி இறைச்சிகளை எடுத்து வர அனுமதி உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து ஒரு நபர் இறைச்சி வகைகளில் அதாவது ஐந்து கிலோகிராம் வரை சிங்கப்பூருக்குள் எடுத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.