Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் பெண்கள் கரு முட்டைகளை உறைய வைத்து குழந்தை பெறலாமா?

அண்மையில் உள்ளூர்,அனைத்துலக ஆதாரங்கள் 37 வயது வரை உள்ள பெண்களின் கரு முட்டைகளை உறையவைத்து பிள்ளைகளைப் பெறும் விகிதம் நிலையாக உள்ளதாக மறுஆய்வு செய்யப்பட்டதில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் கரு முட்டைகளை உறையவைக்கும் வயது வரம்பு 35-லிருந்து 37- க்கு உயர்த்தப்படும். அதனை நேற்று சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளது.

அது ஜூலை மாதம் முதல் தேதிக்குள் நடைமுறைக்கு வரும்.

புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட நோய்களால் அவதிப்படும் பெண்கள் மட்டுமே அவர்களது கருத்தரிப்பு வாய்ப்புகளை பாதுகாக்க தற்போது அந்த நடைமுறையை மேற்கொள்கின்றனர்

கடந்த 2022-ஆம் ஆண்டு 21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கரு முட்டைகளை உறைய வைப்பதைச் சிங்கப்பூர் சட்டபூர்வமாக்கியது.

நேற்று அறிவிக்கப்பட்ட புதிய மாற்றத்தினால் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கரு முட்டைகளை உறைய வைக்கலாம்.

சட்டப்படி திருமணம் செய்த பின்னரே உறைய வைத்த கரு முட்டைகளைக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

37 வயதுக்கு மேலான பெண்கள் உறைய வைத்த கரு முட்டைகளைக் கொண்டு பிள்ளைகளை பெறும் விகிதம் குறைந்து வருவதாக கூறின.