சிங்கப்பூரில் நேற்று விளையாட்டு வீரர்களுக்கு கொடி வழங்கும் சடங்கு நடைபெற்றது.
அடுத்த மாதம் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற விருக்கும் சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுகளில் சிங்கப்பூரை பிரதிநிதித்து 30 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதிபர் ஹலிமா யாக்கோபும்,சமூக,கலாசார, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங்கும் குழுவினரிடம் சிங்கப்பூர் கொடியை வழங்கினர்.
சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைக்கால விளையாட்டுகளில் 190 நாடுகளைச் சேர்ந்த அறிவுத்திறன் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்பர்.
இதற்குமுன் 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் சிங்கப்பூர் பங்கேற்றது.
அதில் சிங்கப்பூர் 4 தங்கம்,4 வெள்ளி,4 வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா கலந்துக் கொண்டது பெருமை அளித்ததாக குழுத் தலைவர் Linda Prebhash கூறினார்.
பொறுப்பான விளையாட்டாளர்கள் என்ற முறையில் தங்களின் நாட்டைப் பிரதிநிதிக்க வேண்டும் என்பதையும்,நாடு தங்களுக்கு ஆதரவாக இருப்பதையும் காட்டுகிறதாக அவர் கூறினார்.