வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் Earthshot உலகச் சுற்றுப்புற விருது நிகழ்ச்சி நடைபெற விருக்கிறது.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அந்த விருது நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.மூன்றாவது ஆண்டாக Earthshot உலகச் சுற்றுப்புற விருது நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி இதற்குமுன் லண்டன்,போஸ்ட்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
பூமியைக் காக்கவும்,பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் புதிய யோசனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது.
அந்த விருது நிகழ்ச்சியின் 5 வெற்றியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் பவுண்டு பரிசுத் தொகை பெறுவர்.
விருது நிகழ்ச்சி நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்.
Earthshot விருது நிகழ்ச்சி வார கொண்டாட்டமாக உலக இசை வல்லுனர்கள்,கலைஞர்களோடு நடைபெற உள்ளது.
புதிய சிந்தனைகளை வெற்றியாளர்களோடு செயல்படுத்துவது பற்றி ஆராய்வதற்கு உலகமெங்கும் இருந்து வர்த்தக தலைவர்களும், முதலீட்டாளர்களும் சிங்கப்பூருக்கு வருகைப் புரிவர்.
Temasek நிறுவனம்,Temasek அறக்கட்டளை,முதலீட்டு நிறுவனமான GenZero மற்றும் Conservation International ஆகியவை விருது நிகழ்ச்சிக்கு ஆதரவு அளிக்கும்.