விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

கடவுளை சாதாரணமாக வணங்குவதை விட விளக்கேற்றி வழிபடுவது மிகவும் ஆற்றல் மிக்கதாக கருதப்படுகிறது.

தெய்வத்தின் உருவச்சிலை அல்லது சிலை இல்லையென்றால் விளக்கு ஏற்றி வழிபட்டால் நாம் நினைக்கும் கடவுள் அந்த சுடரில் எழுந்தருளி அருள்புரிவதாக நம்பிக்கை உள்ளது.

விளக்கேற்றுவது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.இருப்பினும் விளக்கு ஏற்றுவதில் பல சந்தேகங்கள் பலருக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

எத்தனை முகங்கள் விளக்கேற்ற வேண்டும்,எந்த உலோகத்தால் ஆன விளக்கில் விளக்கேற்ற வேண்டும், என்று பலவற்றை பார்த்து பார்த்து செய்தாலும் விளக்கு ஏற்றிய பின் அதில் உள்ள திரியை என்ன செய்ய வேண்டும் என்பதில் சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

விளக்கில் இருக்கும் திரியை தினமும் மாற்றினாலும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை மாற்றினாலும் உபயோகித்த திரிகளை சேர்த்து ஒரு சிறிய பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.
கொஞ்சம் திரிகள் சேகரிக்கப்பட்டதும் வீட்டில் உள்ள அனைவரையும் கிழக்கு முகமாக உட்கார வைத்து இந்த திரிகளைப் பயன்படுத்தி திருஷ்டி சுத்த வேண்டும்.

இரவு உணவிற்கு பிறகு தூங்க செல்வதற்கு முன் தூபக் காலில் திரிகளைப் போட்டு அனைவரையும் சேர்த்து வலமிருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும் திருஷ்டி சுத்த வேண்டும்.

திருஷ்டி சுத்திய பிறகு,அதனை வீட்டு வாசலில் கொளுத்தி விடுங்கள்.அது முழுவதுமாக எரிந்தவுடன் அந்த கரியை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
அல்லது பாத்திரம் கழுவும் சிங்கில் கரைத்து விட வேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்களை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து உங்களுக்கு நன்மை கிடைக்கும்.