இவ்வாண்டு பிற்பகுதியில் இன்னும் வேகமான இணைய சேவை சிங்கப்பூரில் வரவிருக்கிறது.
புதிய அதிவேகச் சேவை எனும் Wi-Fi 6E சேவையை அரசாங்கம் அறிமுகம் செய்கிறது.
புதிய அதிவேக இணைய சேவை வளரும் தேவையை நிறைவு செய்யும்.
அது விரிவான சேவையை வழங்கும்.
தடங்கல் இல்லாத வேகத்தையும் அதனிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
சாங்கி பொது மருத்துவமனையில் இயங்கும் மனித இயந்திரக் கருவிக்கு உயிர்நாடியாக இருப்பது இணைய தொடர்பு.
தடங்கல் இல்லாத இணைய சேவை இருந்தால் தான் அது வேலைச் செய்யும்.
அது மின்தூக்கி,கதவுகளோடு சரியாக பேசும்.நோயாளிகளோடு தொடர்பு கொள்ளவும்,ஒன்றையொன்று புரிந்து கொள்ளவும் சீரான இணைய சேவையை நம்பி இருக்கிறது.
புதிதாக அறிமுகமாக உள்ள Wi-Fi 6E அந்த நம்பிக்கையை அளிக்கிறது.
இணைய உலகில் அது எட்டப்போகும் உயரம் இதுவரை எட்டாத உயரமாக இருக்கும் என்று தொடர்பு, தகவல், சுகாதார மூத்த துணை அமைச்சர் Dr.Janil Puthucheary கூறினார்.
இந்த அதிவேகம் நவீனக் கருவிகளின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்றார்.
வேகமான, சீரான இணைய சேவை மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்றும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது.