Singapore job news online

சிங்கப்பூரில் இனி,12 முதல் 17 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்!

சிங்கப்பூரில் உள்ள 12 வயது 17 வயது வரை உள்ள பிள்ளைகள் Nuvaxovid தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்கு தேசிய தடுப்புச் சட்டம் வகைச் செய்கிறது.

சுகாதார அமைச்சகம் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது.

Nuvaxovid தடுப்பூசியை வரும் 15-ஆம் தேதியிலிருந்து பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களில் போட்டுக் கொள்ளலாம்.

மருத்துவ காரணங்களுக்காக 12 முதல் 17 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு Pfizer-BioNTech தடுப்பூசியைப் போடமுடியாவிட்டால் அல்லது mRNA அல்லது தடுப்பூசியைப் போட விரும்பினால் Nuvaxovid தடுப்பூசியை அணுகலாம்.

12 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் 3 முறை Novavax/Nuvaxovid தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது என்று சுகாதார அமைச்சகம் கூறியது.

கோவிட்-19 கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கும்,கடுமையான நோய்கள் வருவதைக் குறைப்பதற்கும் அனைவரும் Booster உட்பட தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்திகிறது.