சிங்கப்பூரில் Zika கிருமி தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த தொற்று மூன்று பேரிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் Kovan வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.மூவரில் இருவர் வீட்டிலேயே குணமடைந்து வருகின்றனர்.
மற்றொருவர் மருத்துவமனையில் இருக்கிறார்.அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.
பாதிப்புக்கு ஆளான மூவரில் எவருமே கர்ப்பிணியர் இல்லை.
கோவான் வட்டாரத்தில் வேலை செய்வோர்கள் அல்லது வசிப்பவர்களிடம் Zika பரிசோதனைச் செய்யும்படி சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியது.
சிங்கப்பூரில் தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தொற்றுக்கு ஆளானவர்களிடம் அறிகுறி ஏதும் தென்படவில்லை அல்லது லேசான அறிகுறிகளே காணப்பட்டது.
தீவெங்கும் zika கிருமி மேலும் பரவ வாய்ப்புள்ளாதா என்பதைக் குறித்து இப்போதே சொல்ல இயலாது என்று அதிகாரிகள் கூறினர்.