நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…????

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா...????

நாம் அன்றாடம் பருகும் தண்ணீரில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மனிதன் உடலுக்கு தேவையான நீரை பருக வேண்டும் இல்லையெனில் அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு.

நமது உடல் தோராயமாக 60% தண்ணீரால் ஆனது. இது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவது முதல் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பது வரை தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. உடலில் உள்ள தேவையான கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு செல், திசு மற்றும் உறுப்பு நன்றாக செயல்பட தண்ணீர் முக்கியமானது. எனவே ஒவ்வொருவரும் தண்ணீர் பருகுவதை ஊக்குவிப்பதற்காக மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

💦 தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.

💦 குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.


💦 தூங்கி எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

💦 தூங்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதத்திலிருந்து தப்பிக்கலாம்.

💦 சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்.


💦 தண்ணீர் அதிகம் பருகுவதால் செரிமானம் தூண்டப்பட்டு எடை இழப்பிற்கு உதவுகிறது.

💦 தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற நச்சுப் பொருட்கள் சிறுநீர் மற்றும் வியர்வை வழி வெளியேறுகிறது.

💦 சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

💦 உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நினைவாற்றலை அதிகரிக்கிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg