சிங்கப்பூர் காவல்துறை வேலைத் திட்டக் கருத்தரங்கில் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டு பேசினார்.
காவல்துறை பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றால் நடுநிலையாகவும், சுயேட்சியாகவும் செயல்படுவது முக்கியம் என்றார்.
2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா அதிபர் தேர்தலில் Donald Trump தோல்விக்கண்ட போது அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கினர்.
அந்த சம்பவத்தில் 140 காவல்துறையினர் காயம் ஏற்பட்டது.
சுமார் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் அமைதியாகச் சென்றதாக Fox News தொலைக்காட்சி கூறியது.
எந்த நாட்டிலும் அது போன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்றார்.காவல்துறையை அரசியல் விவாதத்துக்குள் கொண்டு வரப்படலாம் என்றார்.
காவல்துறை அரசியல் போராட்டத்தில் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறினார்.
மக்களிடையே இருக்கும் வேறுபாடுகளைச் சரியாக கையாள்வதும் அரசாங்கத்தின் பொறுப்புதான் என்றார்.
காவல்துறை இன, சமய வேறுபாடுகளுக்குள் சிக்கி விடாமல் தவிர்க்க முடியும் என்றார்.
காவல்துறைமீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதை எப்போதுமே உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றார்.