Latest Singapore News in Tamil

இனி, சிங்கப்பூரில் உள்ள வீடுகளில் கட்டாயமாக இது இருக்க வேண்டும்!

சிங்கப்பூரில் எல்லா வீடுகளிலும் மின்சார பாதுகாப்பு சாதனம் பொருத்தப்பட வேண்டும்.

அந்த சாதனம் மின்சார கசிவு ஏற்படும் போது மின்சாரம் தாக்காமல் தடுக்கும்.

வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும்.

அதனை எரிசக்தி சந்தை ஆணையமும்,வீடமைப்பு வளர்ச்சி கழகமும் தெரிவித்தது.

வீட்டு உரிமையாளர்கள் அதனைப் பொருத்த 2 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது.

அந்த சாதனம் பழைய, கெட்டுப்போன கம்பி வடங்களைக் கொண்ட மின்சார சாதனங்களால் ஏற்படக்கூடிய மின்சார அதிர்விலிருந்து பாதுகாக்க உதவும்.

1985-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட ஓரறை, ஈரறை வீடுகளில் மின்சார பாதுகாப்பு சாதனத்தைப் பொருத்துவதற்கான செலவை அரசாங்கம் ஏற்கும்.

அந்த உதவி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.