சிங்கப்பூரின் கட்டடத்துறை ஊழியர்கள் புதிய திட்டம் அறிமுகமாக உள்ளது.கூடிய விரைவில் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை ஊழியர்களுக்கு மேற்கொள்ள புதிய திட்டம்.
ஊழியர்கள் தானியக்கத் தொழில்நுட்பம், இயந்திரவியல் ஆகியவற்றில் பயிற்சி பெற முடியும்.
அந்த திட்டம் காலத்திற்கேற்ப கட்டடத் துறை ஊழியர்கள் மாறுவதற்கு உதவும்.
அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் பொறுப்பைக் கட்டட, கட்டுமான ஆணையப் பயிற்சிக் கழகம் ஏற்று நடத்தும்.
இது கட்டுமான வடிமைப்பில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.
கட்டடங்களைக் கட்ட தொடங்குவதற்குமுன் மெய்நிகர்,மிகை மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் அவற்றைக் காண வாய்ப்பு கிடைக்கிறது.
இயந்திர மனிதக் கருவி தொழில்நுட்பம், தானியக்க தொழில்நுட்பம் ஆகியவற்றில் கட்டட, கட்டுமான ஆணையப் பயிற்சி கழகம் பயிற்சிகளை வழங்கும்.
பணியிலிருந்து வேறு பணிக்கு செல்ல விரும்புவோருக்கு புதிய திட்டம் கைகொடுக்கும்.
ஜூன் மாதம் பயிற்சிகள் தொடங்கும்.
30,000 பேருக்கு மூவாண்டுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
புதிய தொழில்நுட்பத்தை அங்கீகரிப்பது புதிய திறனாளர்களை ஈர்ப்பதற்கு உதவும்.