Singapore Job Vacancy News

சிங்கப்பூரில் கோவிட்-19 உச்சக்கட்டம்!

சிங்கப்பூரின் தற்போதைய கோவிட்-19 நிலவரம் உச்சக்கட்டத்தை எட்டி விட்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

அன்றாடம் 3000 க்கும் குறைவான நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகின்றன. அதனை நேற்று (மே-9) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த மாதம் சுமார் 4000 கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு சம்பவங்கள் தினமும் பதிவாகின.

தற்போது மருத்துவமனையில் சுமார் 300 க்கும் அதிமானவர்கள் கோவிட்-19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வரும் வாரங்களில் அந்த எண்ணிக்கை குறையக்கூடும் என்றார்.

சுகாதார அமைச்சகம் தொடர்ந்து பல்வேறு வகையான கிருமி வகைகளைக் கண்காணிக்கும் என்றும் கூறினார்.

கோவிட்-19 தடுப்பூசிகளை மூத்தோர்களில் பலர் தொடர்ந்து போடுவதில்லை என்று கூறினார். அதனை போட்டுக் கொள்வது நல்லது என்று வலியுறுத்தினார்.

கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் இதய நோய் எனும் Myocarditis ஏற்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுவரை 17 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.அதில் இதயம் சம்பந்தப்பட்ட 160 புகார்கள் மட்டுமே கிடைத்ததாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.