சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மூலம் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனை குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது .

சேவையைப் பயன்படுத்தி அனுமதியின்றி முகவரியை மாற்ற முயற்சி செய்ததாக 80 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சில பொறுப்பற்றவர்கள் திருடப்பட்ட Singpass கணக்கு தகவல்களைப் பயன்படுத்தி இவ்வாறு செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்வழி போலி கணக்குகளை உருவாக்கி மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்தது.

இதனையடுத்து நேற்று (ஜனவரி 11) காலையிலிருந்து eCOA இணையம் வழி வீட்டு முகவரியை மாற்றும் சேவையை ஆணையம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது .

சேவையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படும் என்று ஆணையம் கூறியது.

அதன் சேவை மீண்டும் ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.