Singapore news

சிங்கப்பூரின் வாட்ஸாப் பயனீட்டாளர்களுக்கு!

சிங்கப்பூரில் வாட்ஸாப் பயன்படுத்துவோர் இன்றிலிருந்து (மே-9) சில உள்ளூர் நிறுவனங்களுக்கு நேரடியாக பணம் செலுத்த ஒரு புதிய கட்டண முறை அறிமுகமாகி உள்ளது.

புதிய கட்டண முறையின் மூலம் வாடிக்கையாளர்களும், நிறுவனங்களும் நேரடியாகவே பண பரிவர்த்தனைச் செய்து கொள்ளலாம்.

அந்த கட்டண முறை தற்போது இந்தியாவிலும்,பிரேசிலிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதனை கட்டணச் சேவை வழங்கும் Stripe எனும் நிறுவனம் நிர்வகிக்கின்றது.

சிங்கப்பூரர்கள் MasterCard,Visa, American Express,ரொக்கக் கழிவு அட்டைகள், கடன்பற்று அட்டைகள் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்தலாம்.

அந்த புதிய கட்டண முறைச் சேவைக்கு Whatsapp நிறுவனத்தி ற்குப் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.