உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!!
உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று(ஜனவரி 11) காலை மோசமான .
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .
போக்குவரத்து நெரிசல் பிற்பகல் நேரத்தில் மோசமாக இருந்தது.
Checkpoint.sg தரவுகளின் படி,கடந்த சனிக்கிழமையைவிட நேற்று மலேசியாவுக்குச் செல்லும் மக்கள் அதிகமாக இருந்தனர்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடி வழியாக பயணிக்க 90 நிமிடங்கள் முதல் 140 நிமிடங்கள் வரை ஆகும் என்று Checkpoint.sg செயலி பிற்பகல் 3.10 மணிக்கு காட்டியது.
சிங்கப்பூர் குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் முகநூல் பக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்து பதிவிட்டது.
உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு மலேசியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலே காரணம் என்று ஆணையம் கூறியது.
மக்கள் பயணம் செய்வதற்கு முன்னதாக போக்குவரத்து நிலைமையைச் சரிபார்க்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.
Follow us on : click here