சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!!
பச்சிளம் குழந்தைகளுக்கு வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயை பரிசோதனை செய்யும் புதிய செயலி ஒன்று அறிமுகமாக இருக்கிறது.
இதன் மூலம் பெற்றோர்கள் வீட்டிலிருந்தே பரிசோதித்துக் கொள்ளலாம்.
சிங்வெல்த் பல்துறை மருந்தகங்கள், சிங்கப்பூர் பொது மருத்துவமனை,Synapxe எனும் அமைப்பு ஆகியவை இணைந்து அந்த செயலியை உருவாக்கியது.
பிறக்கும் ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதாகவும் அதேபோல குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஐந்தில் நான்கு குழந்தைகள் மஞ்சள் காமாலை நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.
இந்த நோயால் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை,வளர்ச்சி பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமாகும்.
இந்த செயலியின் மூலம் 550 குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னோட்டமாக வரும் 1.5 ஆண்டில் குறைந்தது 2000 குழந்தைகளுக்கு இந்த செயலியை கொண்டு பரிசோதனை நடத்தப்படும்.
மஞ்சள் காமாலையை அறிந்து சிகிச்சை அளிக்க குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்,அவ்வாறு கைக்குழந்தைகளை அழைத்து செல்லும்போது வேறு நோய்கள் பரவும் அபாயம் உண்டு.இதனை தடுக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here