2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா?

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா?

சிங்கப்பூரில் சென்ற வருடம் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதே போல 2016 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டும் நிலவிய வெப்பநிலை போன்று அதிக அளவு வெப்பநிலை சென்ற வருடமும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மிகவும் வெப்பமாக இருந்தது.
சராசரி வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸாக பதிவானது.வெப்பநிலை பதிவாகியுள்ள மாதங்களில் ஏப்ரல் மாதம் மிக வெப்பமான மாதம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் ஜூலை மாதத்தில் சராசரி வெப்பநிலை 29.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், டிசம்பர் மாதத்தில் சராசரி வெப்பநிலை 27.7 டிகிரி செல்சிய ஸாக பதிவாகியுள்ளது.

இந்த மாதங்களில் மிகவும் சூடானதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

El Nino பருவநிலை மாற்றமே சென்ற வருடம் சிங்கப்பூரில் அதிக வெப்பம் பதிவானதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
ஆண்டின் தொடக்கத்தில் பெய்த மழைக்கும் இந்த மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது.