வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவச் செலவுகளை 2020-ஆம் ஆண்டுக்கும் 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 30 க்கும் அதிகமான முதலாளிகளால் செலுத்த முடியவில்லை.இதனை மனிதவள அமைச்சகம் கூறியது.
அத்தகைய பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என்று சில லாப நோக்கமற்ற குழுக்கள் கூறுகிறது.
சிங்கப்பூரில் ஜூலை மாதத்திலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலாளிகள் குறைந்தது 60,000 வெள்ளி மதிப்பிலான காப்புறுதியை வாங்க வேண்டும்.
அதனால், அந்த நிலைமை மாறும் என்று நம்பிக்கை அளித்தனர்.
ஒரு சில நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவ செலவுகளை இங்கு சமாளிப்பதைவிட, அவர்களை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
காப்புறுதி தொகையைக் கோரிய பிறகு,சந்தா கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என்று கூறியது.